கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-06-18 06:09 GMT
பள்ளி மாணவர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் மணிகண்டன் (வயது 17). இவர் எளாவூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் இருந்து பெத்திக்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தார்.

சாவு
நாகராஜகண்டிகை கிராமம் அருகே செல்லும்போது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரம் இருந்த மதில்சுவர் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லு்ம் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்