தண்டவாளத்தில் நின்ற மாடு மீது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது

கீரனூர் அருகே தண்டவாளத்தில் நின்ற மாடு மீது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது

Update: 2021-06-17 21:16 GMT
கீரனூர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் சுமார் 5.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரெயில் நிறுத்தத்திற்கு முன்னதாக சுமார் 1 கி.மீ. தூரத்தில் ரெயில் வந்த போது தண்டவாளத்தின் குறுக்கே காளை மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது.இதனை எதிர்பார்க்காத என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த திடீரென பிரேக் பிடித்தார். இருந்தாலும் ரெயில் வேகமாக வந்ததால் உடனடியாக நிற்காமல் மாடு மீது மோதி விட்டு சற்று தூரம் தள்ளிச் சென்று நின்றது. இதில் அந்த காளை மாடு சம்பவ இடத்திலேயே செத்தது.மாடு மீது ரெயில் மோதியதாலும் அதிகாலை நேரத்தில் திடீரென பிரேக் பிடிக்கப்பட்டு ரெயில் நிறுத்தப்பட்டதாலும் பெட்டிகள் குலுங்கின. அப்போது ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறியடித்து எழுந்தனர். பின்னர்  தண்டவாளத்தில் செத்துக் கிடந்த காளை மாட்டை அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்