கொரோனாவுக்கு 3 பேர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 3 பேர் இறந்தனர். 163 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-17 17:59 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41,035 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 315 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 37,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் அருகே சாலையாம்பாளையத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரும், மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண்ணும், செஞ்சியை சேர்ந்த 60 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது.

163 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,198 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,365 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 2,515 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்