எட்டயபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
எட்டயபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த லக்கமாள்தேவி, விகாம்பட்டி, குமரிகுளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் சார்பதிவாளர் (பொறுப்பு) பொன்கோகிலாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், எங்கள் பகுதி விவசாயிகளுக்கு எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு கிராம மாலில் புஞ்சை நிலங்கள் உள்ளது. அந்த நிலங்களை சிலர் நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் முறைகேடாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். எனவே முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யவேண்டும். இழந்த விவசாய நிலங்களை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.