கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் 30 பேருக்கு தடுப்பூசி

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் 30 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-06-17 17:04 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்து ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பு வழிமுறைகளின் படி ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பணியில் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களின் வழக்கப்படி தகனம் செய்வதோடு, பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

தொற்று பரவலை தடுக்க கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி முகாம் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொக்லைன் எந்திர டிரைவர், தன்னார்வலர்கள் என 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்