குன்னூரில் கொரோனா தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகை

குன்னூரில் கொரோனா தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-17 17:04 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

குன்னூர் பகுதியில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அடிக்கடி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குன்னூரில் உள்ள பெண்கள் தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. 

இதையடுத்து தடுப்பூசி முன்பு பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக சுகாதாரத்துறையினர், டாக்டர்கள் யாரும் வரவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து அலைகழிக்கப்பட்டு வருகிறோம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

 உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்