திருச்செந்தூர் புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்பு
திருச்செந்தூர் புதிய உதவி கலெக்டராக கோகிலா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உதவி கலெக்டராக பணியாற்றிய தனப்பிரியா, நீலகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை பயிற்சி உதவி கலெக்டராக பணியாற்றி வந்த கோகிலா, திருச்செந்தூர் உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். நேற்று அலுவலகத்தில் கோகிலா புதிய உதவி கலெக்டராக பொறுப்பேற்றார். அப்போது, நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் உடனிருந்நதார்.