பிரசவித்த பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி
பிரசவித்த பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி
கோவை
பிரசவித்த பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கோவை அரசு ஆஸ்பத் திரி மற்றும் நஞ்சப்ப ரோடு மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
இதில் பிரசவித்த பெண்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சிலர் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
மருத்துவத்துறை அனுமதி அளித்ததன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை பிறந்த 6 மாதத்தில் இருந்து பெண்கள் தடுப்பூசி போடலாம்.
தடுப்பூசி போடும் பிரசவித்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு ½ கிலோ பாட்டில் 2, சத்து டானிக் 3 பாட்டில், ½ கிலோ பேரீச்சம்பழம் 2 பொட்டலம், ஆவின் நெய் ½ கிலோ, குடற்புழு நீக்க மாத்திரை, ஓரு துண்டு ஆகியவை அடங்கிய பெட்டகம் கூடையில் வைத்து கொடுக்கப்பட்டது.
தடுப்பூசி போட வரும் பெண்கள் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.