திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் சுபாஷ்சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 65). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வள்ளி என்பவர் தினமும் அடுப்பை எரிக்கும் போது கடும் புகை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-17 06:14 GMT
இதை தட்டிக்கேட்டதில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வள்ளி தனது உறவினர்களான மோகனா, மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து மணியம்மாளை கையாளும் கற்களாலும் தாக்கி உள்ளனர்.இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து மணியம்மாள் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வள்ளி, மோகனா, மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூரை அடுத்த ராமதண்டலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அஸ்வத்தாமன் (22), என்பவர் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே நடந்து வந்தபோது, புங்கத்தூர் பத்தியால் பேட்டையை சேர்ந்த அப்பு (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக அஸ்வத்தாமன் மீது மோதுவது போல் சென்றுள்ளார்.இதுகுறித்து அவர் தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த அப்பு, அஸ்வத்தாமனை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நிவாஸ் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண் விஷ்வா (22).இவர் தனது சகோதரர் ஸ்ரீஹரி என்பவருடன் நேற்று முன்தினம் அதிகாலை திருவள்ளூருக்கு வந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அருண் விஷ்வா, ஸ்ரீ ஹரி ஆகியோரிடம் இருந்து மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.நடந்த சம்பவம் குறித்து அருண் விஷ்வா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்