பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரைச் சேர்ந்தவர் முகேஷ் என்ற ராக்கி (வயது 27). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஊர் அருகே குளத்தின் கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துசாமி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.