பாளையங்கோட்டை சிறையில் செல்போன் பறிமுதல்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-16 19:00 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து நேற்று ஜெயிலர் வசந்த கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர் செல்போன் பேசிக் கொண்டிருந்தனர். உடனே சிறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இது யாருடைய செல்போன், இதில் யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்