சூதாடிய 4 பேர் கைது
திருத்தங்கல் பகுதியில் சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் சிலர் காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமசுந்தர் (வயது 28), ஈஸ்வரன் (30), செந்தில்குமார் (28), மகாலிங்கம் என்கிற குட்டி (35) ஆகியோரை கைது செய்தார்.