கோர்ட்டு வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கோர்ட்டு வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சப்-கோர்ட்டு நீதிபதி பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
முகாமில் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் 150 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஆனந்தி, சுபாஷினி, நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் வக்கீல்கள் சங்க தலைவர் துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.