200 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி

திருத்துறைப்பூண்டியில் 200 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-06-16 17:57 GMT
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் 200 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா பரவல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் பகுதிகளில் தொற்று குறையாததால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களுக்கு அரசு எடுத்துக்கூறி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். 
200 பேருக்கு மட்டும்
 ஆனால் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நேற்று காலை 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான ஆண்கள், பெண்கள் தடுப்பூசி போட குவிந்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வரிசையில் வந்தவர்களில்  200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மீதி உள்ளவர்களுக்கு வரும் நாட்களில் தொடர்ந்து தடுப்பூசி வந்தவுடன்  போடப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்

மேலும் செய்திகள்