புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-16 17:46 GMT
சிவகங்கை,ஜூன்
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது. 
இதனிடையே நேற்று 88 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களை தவிர 977 பேர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர். இம்மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்க வில்லை. 

மேலும் செய்திகள்