சூதாடிய 7 பேர் கைது

சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-16 17:28 GMT
அன்னவாசல், ஜூன்.17-
அன்னவாசல் அருகே உள்ள கொடிக்கால் தெருபகுதியில் பணம் வைத்து சூதாடிய அன்னவாசல் மேட்டுதெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 31) உள்பட 4 பேரை அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அன்னவாசல் அருகே புதூர் பிரிவுரோடு பகுதியில் சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சிவசாமி (34) உள்பட 3 பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  ரூ.330 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்