திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க காலணிகள் வருகை
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க காலணிகள் வருகை
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் புத்தகப்பை, காலணி, சீருடை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மீண்டும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் வகையில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சீருடை மற்றும் காலணிகள், புத்தகப்பை உள்ளிட்டவைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்திற்கும் இவை வந்து கொண்டு இருக்கின்றன. விரைவில் அறிவிப்பு வந்ததும் இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
-----