பெட்டிக்கடையில் திருட்டு

பெட்டிக்கடையில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-06-16 16:38 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அன்வர்அலி (வயது49). இவர் ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். காலையில் வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டு இருந்தது. ரூ.2 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்