பேரணாம்பட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி வகுப்பறைகள்

பேரணாம்பட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி வகுப்பறைகள்

Update: 2021-06-16 13:49 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு நகரில், ஆம்பூர் சாலையில் தீயணைப்பு நிலையம் எதிரில் கன்கார்டியா உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை சமூக விரோத கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். கன்கார்டியா உயர் நிலைப்பள்ளியின் வகுப்பறைகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

வகுப்பறைக்குள் புகுந்து தினமும் மது அருந்துவது மற்றும் சூதாட்டம் நடத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மதுபானங்களை அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொது மக்களை மிரட்டுகின்றனர்.

இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்