பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி
பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், வடக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மாலதி ஆகியோர் பணியின் போது மரணமடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகள் நிவாரண தொகை வழங்கினர். மொத்தம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 650 பெறப்பட்டது.
இந்த தொகை இருவரின் குடும்பத்துக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று வேலூர் சூப்பிரண்டு அலுவலத்துக்கு இரு குடும்பத்தினரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அழைத்து அவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்.