அரியலூர் நகரில் இன்று குடிநீர் வினியோகம் இருக்காது

அரியலூர் நகரில் இன்று குடிநீர் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-15 20:58 GMT
அரியலூர்:
அரியலூர் நகரில் உள்ள 20 ஆயிரம் வீடுகளுக்கு திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து 2 தடங்களில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மூன்று உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு குழாயின் மோட்டார் பழுதாகி சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்