மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2021-06-15 20:50 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
கொத்தனார்
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது30), கொத்தனார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் வரன் பார்த்து வந்தனர். இந்தநிலையில் விஜின் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டார். புலிப்பனம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. 
அப்போது எதிர்பாராதவிதமாக விஜின் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் விஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரிதாப பலி
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதனையடுத்து விஜினின் உடலை தக்கலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

மேலும் செய்திகள்