விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாச சுவாமி கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்றும், தமிழ் மாதம் முதல் தேதியிலும் கோவில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தமிழ் மாதப்பிறப்பான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள அஸ்திர தேவருக்கு பாபநாசம் படித்துறையில் உள்ள சுவாமி மண்டபத்தில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே தீர்த்தவாரி நடத்தினர்.