பாவூர்சத்திரம் அருகே போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

பாவூர்சத்திரம் அருகே போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-15 19:49 GMT
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கருமடையூர் மற்றும் மூலக்கரையூர் கிராம எல்கைகளில் பொதுமக்கள் தங்களது சமுதாய தலைவர்கள் படம் போட்டு பேனர் வைத்து இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற மர்ம நபர் கருமடையூரிலும், மூலக்கரையூரிலும் வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த  கிராமமக்கள் சத்தம் போட்டதால் அந்த நபர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார். இதை தொடர்ந்து நேற்று அப்பகுதி மக்கள் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். மேலும் பலர் அங்கு திரண்டு போராட்டம் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு  பொன்னிவளவன் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, புதிதாக பேனர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், பேனர்களை கிழித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்