லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டம்குடியை சேர்ந்தவர் அரவிந்த்சாமி (வயது23). ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்த ஒருவரின் உடலை ராஜபாளையத்தில் உள்ள அவர்கள் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு பின்னர் மதுரை செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த லாரி டிைரவர் மூர்த்தி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அரவிந்த்சாமியை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக கூறினர். காயமடைந்த மூர்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.