வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-15 19:18 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ராஜபாளையம் 
அதன் விவரம் வருமாறு:- 
வத்திராயிருப்பு யூனியன் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய திருநாவுக்கரசி, நரிக்குடி யூனியன் வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். விருதுநகரில் வட்டார ஊராட்சி வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். 
ராஜபாளையம் யூனியனில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணியாற்றிய சிவக்குமார் காரியாபட்டி யூனியன் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வத்திராயிருப்பு 
 விருதுநகர் யூனியனில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ராமமூர்த்தி, வத்திராயிருப்பு கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
வத்திராயிருப்பில் பணியாற்றிய சீனிவாசன், சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகாசியில் பணியாற்றிய ராஜமோகன், விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை யூனியனில் பணியாற்றிய சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய வசந்தகுமார், வத்திராயிருப்பு யூனியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ராஜபாளையம் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியவதி, நரிக்குடி யூனியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  நரிக்குடி யூனியனில் பணியாற்றிய சத்தியமூர்த்தி ராஜபாளையம் யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலரான ராமமூர்த்தி, வெம்பக்கோட்டை யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் பணியாற்றிய சிவகுமார் ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
அருப்புக்கோட்டை 
 காரியாபட்டி யூனியனில் பணியாற்றிய நாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றப்பட்டுள்ளார். காரியாபட்டி யூனியனில் பணியாற்றிய மல்லிகா, விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நரிக்குடியில் பணியாற்றிய ரவிக்குமார், அருப்புக்கோட்டை யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அருப்புக்கோட்டை யூனியனில் பணியாற்றிய சூரியகுமார் அருப்புக்கோட்டை யூனியன் வட்டார ஊராட்சி வட்டாரவளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
 விருதுநகர் ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய ராஜசேகரன், காரியாபட்டி வட்டார ஊராட்சி அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
 மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்