கொரோனாவுக்கு 5 பேர் பலி

கொரோனாவுக்கு 5 பேர் பலி

Update: 2021-06-15 18:13 GMT
கரூர்
கரூர்
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனையடுத்து நேற்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் 123 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 1,242 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்