நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணி: மரங்கள் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு

நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டுப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-15 17:39 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 38 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை 230 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதில் நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் சாலையோரத்தில்  நேற்று காலை முதல் பழமைவாய்ந்த மரங்கள் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது வெட்டப்படும் மரக்கிளைகள் மற்றும் மரத்தடிகள் சாலையோரம் குவிக்கப்பட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில்  கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 ஏற்கனவே அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், தற்போது மேலும் மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது. 
இதுபோன்று மரங்கள் வெட்டும் போது, போக்குவரத்தை சீரமைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்