கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு

கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு

Update: 2021-06-15 16:59 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாகத்தில் வெள்ளகோவில் தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு அலுவலர் தனசேகர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சார்பில் கோவில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. 
அதன்படி வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் முன்னிலையில் வீரக்குமாரசுவாமி கோவில், வெள்ளகோவில், சோழீஸ்வரசுவாமி கோவில், வெள்ளகோவில், வரதராஜப்பெருமாள் கோவில், வெள்ளகோவில், மாரியம்மன் கோவில், கண்ணபுரம், விக்கிரம சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம், வைத்தியநாதசுவாமி கோவில், மயில்ரங்கம், பொன்அழகுநாச்சியம்மன் கோவில், வள்ளியரச்சல், செல்லாண்டியம்மன் கோவில், மணலூர், மருதகாளியம்மன் கோவில் மாம்பாடி ஆகிய கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பூசாரிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தங்களையும் மற்றும் கோவில் உடைமைகளையும், பொதுமக்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்