செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-15 03:20 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 522 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,247 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 210 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 674 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,121 உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்