முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 5 பேருக்கு வலைவீச்சு
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கோலப்பஞ்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.கோலப்பஞ்சேரி சாலையில் வந்த போது, முன்விரோதத்தில் அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சேட்டு, மகா, ராக்கி, ராகுல், ராஜேஷ் ஆகிய 5 பேரும் சதீசை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.இதில் பலத்த காயமடைந்த அவர், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக வெள்ளவேடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.