ஊரடங்கு தளர்வால் சலூன், டீக்கடைகள் திறப்பு
ஊரடங்கு தளர்வால் சலூன், டீக்கடைகளும் திறக்கப்பட்டன
திருச்சி
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை சலூன் கடைகளும், டீக்கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு மாத இடைவெளிக்கு பின் சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் முடி வெட்டவும், முகச்சவரம் செய்யவும் சில சலூன்களில் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். டீக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டதால் சாலையோர கடைகள் உள்ளிட்ட டீக்கடைகள் திறக்கப்பட்டன. டீக்கடைகளில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஒரு சில கடைகளில் கண்ணாடி டம்ளர்களை தவிர்த்து பேப்பர் கப்புகளில் டீ வழங்கப்பட்டது. இதேபோல காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செல்போன் கடைகள் திறப்பதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு செல்போன் கடை அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டது. மேலும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடைகளும் திறக்கப்பட்டன.