கரூர் மாவட்டத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா

Update: 2021-06-14 21:02 GMT
கரூர்
கரூர்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைய தொடங்கி உள்ளது. அதன்படி கரூரிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி ேநற்று கரூர் மாவட்டத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 456 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பு உள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்