மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இறுதிச்சடங்கு நடத்துவது போல் மொபட்டை பாடை கட்டி தூக்கி வந்தனர்.
இதற்கு முன்பு ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு வந்தார்.. இதில் கிளைச் செயலாளர் ஒஞ்சிதேவன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் காமாட்சி, முத்துக்குமார், பிரபு, விஜய், திவாகரன், தினகரன்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். காடுபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பாண்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.