ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’

அருப்புக்கோட்டையில் விதிமுறைகளை மீறிய ஜவுளி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-06-14 19:29 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை பெரிய கடை வீதி பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறி ஜவுளி கடைகளில் ஜவுளி விற்பனை செய்யப்படுவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரடியாக அங்கு சென்றனர். பெரியகடைவீதி பகுதிகளில் 2 ஜவுளி கடைகளில் விதிமுறைகளை மீறி ஜவுளி வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 ஜவுளி கடைகளுக்கு அவர்கள் ‘சீல்’ வைத்தனர். 

மேலும் செய்திகள்