திருடிவந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல். வாகன சோதனையில் சிக்கியது

திருடிவந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல். வாகன சோதனையில் சிக்கியது

Update: 2021-06-14 18:04 GMT
அரக்கோணம்

தக்கோலம் கூட்ரோட்டில் தக்கோலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை  நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்  அரக்கோணம் அம்மனூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பன்னீர்செல்வம் (வயது 23) என்பதும், ஆரிகிலபாடியை அடுத்த பலிஜா பண்டிகை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பன்னீசெல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்