உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதிபாலன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவ கண்காணிப்பாளர் பாலமுருகன், துணை முதல்வர் ஷர்மிலா திலகவதி, நிலைய மருத்துவர் மீனா உதவி நிலைய மருத்துவர்கள் ரபீக், வித்யா, மிதுன் குமார், ரத்த வங்கி துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணவேணி, மருத்துவ அலுவலர் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.