மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானாா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில், நேற்று மாலை 6 மணியளவில் எடச்சித்தூரில் இருந்து கோணாங்குப்பத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எடச்சித்தூர் மங்கலம்பேட்டை சாலையில் சென்றபோது நிலைதடுமாறி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.