கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தகர தடுப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தகர தடுப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2021-06-14 16:45 GMT
திருப்பூர்
கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தகர தடுப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கட்டுப்பாட்டு மண்டலங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்படுகிறது.
அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக சுகாதாரத்துறையினரால் கணக்கிடப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிகளவு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. இதுபோல் வெளியாட்கள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகற்றப்படாத தகரத்தால் அவதி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் கடந்த வாரம் 200-க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா அறிகுறியுடன் இருந்தவர்கள் பல பகுதிகளில் குணமடைந்து விட்டனர்.
இருப்பினும் அந்த பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தகரத்தால் ஆன தடுப்புகள் பல இடங்களில் அகற்றப்படவில்லை. குறிப்பாக திருப்பூர் பூம்புகார் நகர் உள்பட பல இடங்களில் இன்னமும் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவுடன் இந்த தகர தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்