கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி

வில்லியனூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலியானார். திருமணமான ஒரு மாதத்தில் நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-14 16:18 GMT
வில்லியனூர், ஜூன்.15-
வில்லியனூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலியானார். திருமணமான ஒரு மாதத்தில் நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருக்கள் 
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யாகசாலை மண்டபங்கள் அமைத்து நேற்று முன்தினம் இரவு பூஜைகள்   நடந்தன. அப்போது தமிழகத்தில உள்ள குமலம் பகுதியை சேர்ந்த குருக்கள் பூபாலன் (வயது 27) என்பவர்     மைக்   மூலம் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். 
போலீசார் விசாரணை
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில்   பூபாலன் சுருண்டு விழுந்தார். இதையடுத்து   அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பூபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பூபாலனுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு   முன்பு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்