வடமதுரையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-14 14:56 GMT
வடமதுரை:
இந்து மக்கள் கட்சியினர் சார்பில் கோவில்களை திறக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரை காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மண்டல தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, டாஸ்மாக் கடைகளை மூட கோரியும், கோவில்களை திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அய்யனார் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்