காஞ்சீபுரம் பகுதியில் மீன், இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம்
காஞ்சீபுரம் பகுதியில் மீன், இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவித்த நிலையில் காஞ்சீபுரம் புதிய ரெயில்வே சாலை, பெரிய காஞ்சீபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் ஏராளமானோர் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்குவதற்காக அங்கு குவிந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.