சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-06-14 00:19 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நாட்டு துப்பாக்கியுடன்...
சத்தியமங்கலம் வனச்சரகத்தில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கே.என்.பாளையம் அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதை பார்த்தனர். உடனே வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
2 பேர் கைது
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கே.என்.பாளையம் டேம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 34), நரசாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்