தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி திருட்டு

தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி திருடப்பட்டது

Update: 2021-06-13 20:55 GMT
ஆலங்குடி
 ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டைக் கிராம கிராமத்தில் வசித்து வரும் மெய்யப்பன் மனைவி தனலட்சுமி (வயது 44) என்பவர் சம்பவத்தன்று 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி தலையணைக்கு கீழே வைத்து விட்டு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தலையணைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தாலிச் சங்கிலியை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்