தென்காசியில் கொரோனாவுக்கு 8 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள்.

Update: 2021-06-13 20:13 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது, 87 வயது, 88 வயது பெண்கள் 3 பேர் பலியானார்கள். இதுதவிர 50 வயது, 66 வயது, 75 வயது, 84 வயது ஆண்கள் மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 67 வயது முதியவர் என மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர மாவட்டத்தில் நேற்று 153 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து உள்ளனர். 1,645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்