டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு; பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாவூர்சத்திரத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-13 20:09 GMT
தென்காசி:
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கீழப்பாவூரில் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சுரேஷ், முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, சென்னல்தாபுதுகுளம் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுரண்டையில் நகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஓவியா, சிவனைந்த பெருமாள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்