வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பாத்திரங்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பாத்திரங்கள் திருடப்பட்டன

Update: 2021-06-13 19:50 GMT
திருமயம்
திருமயம் அருகே உள்ள கடியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரும், இவரது உறவினர்களும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்றனர். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடியாபட்டி வந்த ரத்தினம், வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெள்ளி பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருமயம் போலீசில் ரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்