நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரியில் 5 டன் ஆக்சிஜன் வருகை

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரியில் 5 டன் ஆக்சிஜன் வந்தது.

Update: 2021-06-13 19:49 GMT
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரியில் 5 டன் ஆக்சிஜன் வந்தது.

அரசு ஆஸ்பத்திரி

நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மாதம் இங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் எனப்படும் செயற்கை பிராண வாயு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகளின் நிைலமை கவலைக்கிடமானது.
இதையடுத்து அவசர தேவைக்கு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு நோயாளிகள் உயிர் காக்கப்பட்டது.

ஆக்சிஜன் வருகை

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்தும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கிருந்து அவ்வப்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி ஆலையில் இருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரியில் 5 டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. இந்த ஆக்சிஜன் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கொள்கலனில் ஏற்றி நிரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்