மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஜேடர்பாளையம் படுகை அணைக்கு தண்ணீர் வந்தது

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஜேடர்பாளையம் படுகை அணைக்கு தண்ணீர் வந்தது

Update: 2021-06-13 18:41 GMT
பரமத்திவேலூர்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.  மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும்.  
இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் படுகை அணையை வந்தடைந்தது. இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
======

மேலும் செய்திகள்