திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 306 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு. 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர்.
திருவண்ணாமலை
306 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது. தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் போன்றவற்றாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்வதாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் 306 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
5 பேர் பலி
அதுமட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 5 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் நேற்று வரை 46 ஆயிரத்து 249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 43 ஆயிரத்து 302 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தற்போது 2 ஆயிரத்து 422 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 525 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.